நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் அரசுமுறை சுற்றுப்பயணம் காரணமாக அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியும் சுற்றுப் பயணங்களை ரத்து செய்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி சில மாதங்களுக்குப் பிறகு அரசுமுறைப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடி அங்குள்ள ஜெகதீஸ்வரி காளிகோயில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட மூக்குத்தியை காணிக்கையாக கொடுத்து சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவிலிருந்து இருந்த மனிதர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக பூஜை செய்ததாக தெரிவித்துள்ளார்.