மியான்மர் இராணுவ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை 320 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்து ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து வீட்டிலேயே சிறை வைத்தது. அதனால் ஜனநாயக ஆட்சி அமையவும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரி அந்நாட்டில் உள்ளமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
அதனால் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஒடுக்கியது . இதில் ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.ஆனால் அதையெல்லாம் மக்கள் பொருட்படுத்திக்குள்ளமால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர் .மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 628 பேரை கைது செய்து சிறையில் அடைத்த மியான்மர் ராணுவம் பல கோரிக்கைக்கு பிறகு அவர்களை விடுதலை செய்தது . தற்போது வரை ஆட்சிக்கவிழ்ப்பு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 320 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .இது மிகுந்த வேதனை அளிக்கிறது .