Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னோடத காணோம் சார்..! விவசாயி பரபரப்பு புகார்… 2 பேர் கைது..!!

பெரம்பலூரில் டிராக்டரை திருடிய இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வடகரை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக டிராக்டர் ஒன்று உள்ளது. அந்த டிராக்டரை முத்துசாமி வீட்டு வாசல் முன்பு கடந்த 23-ஆம் தேதி நிறுத்தி வைத்துள்ளார். அங்கு இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திடீரென காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்ற காவல் நிலையங்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி பெரம்பலூர் வழியாக டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அதிலிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய வடகரை பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் கமருதீன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த டிராக்டர் பெரிய வடகரையில் இருந்து திருடி வரப்பட்டது என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் டிராக்டரை மீட்டு கை.களத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பின் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |