Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை ஒரே ஜாதியா மாற்றி குடுங்க… கலெக்டர் அலுவலகத்திற்கு… சமூகநீதி பேரவையினர் மனு..!!

பெரம்பலூரில் மக்கள் சமூகநீதி பேரவை அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட மக்கள் சமூக நீதிப்பேரவை அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க புறப்பட்டனர். இந்த அமைப்பிற்கு பேரவை செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சிவமணி, மாநில இணைச் செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் அலுவலகத்திற்கு அவர்களில் 2 பேருக்கு மட்டுமே செல்வதற்கு அனுமதி தெரிவித்துள்ளனர். இந்த பேரவை அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர், மாவட்டச் செயலாளர் உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் குரும்பர், குரும்பா, குரும்ப கவுண்டர் ஆகிய உட்பிரிவுகளை ஒரே ஜாதியாக மாற்றி குரும்பா என்ற பெயரில் அரசு பதிவுகளில் குறிப்பிட வேண்டும். அரசாணை 8/21 சமூக நீதிக்கு எதிராக இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும். குரும்பர் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் தனி தனியான நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Categories

Tech |