நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு பிரபல சீரியல் நடிகை ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வரிசையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது.
இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரேகாவின் வில்லித்தனத்தை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரேகாவிற்கு தெய்வமகள் சீரியல் காயத்ரி என்ற இருந்தது. இந்நிலையில் இவர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நுழைந்துள்ளார்.
அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகபோகும் சீரியலில் ரேகா இணைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த புதிய சீரியலுக்கு “தமிழும் சரஸ்வதியும்” என்று பெயர் வைக்கபட்டுள்ளது.