இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா பொருட்களுமே ஆன்லைன் மூலமாக வாங்கவும், பழைய பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்கவும் முடியும். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் என்பவர் தன்னுடைய கட்டுமான பொறியாளர் வேலையை விட்டுவிட்டு ஆன்லைனில் பழைய பேப்பர், இரும்பு உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் செய்யும் டிஜிட்டல் காயலான் கடை நடத்தி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்ததால் செய்த வேலையை விட்டுவிட்டு இந்த தொழில் தொடங்கி இருக்கிறார். இவர் இந்த தொழிலை ஆரம்பித்தபோது உறவினர்கள், குடும்பத்தினர்கள் கேலி செய்தனர். ஆனாலும் தன் எண்ணத்தை மாற்றாத இவருடைய இப்போது மாத வருமானம் 60 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.