Categories
தேசிய செய்திகள்

கண்ணை மறைத்த காதல்…” பெற்ற தந்தையையே கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க”… கொலை செய்த மகள்..!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மகளை  போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தர்பாரி லால் என்பவர் விவசாயாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ரஞ்சு. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இவரது தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து காதலை கைவிட முடியாது என ரவியிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தந்தை இருந்தால் நம்மை சேர விட மாட்டார் என்று எண்ணி ரஞ்சு காதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

கடந்த வாரம் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒருநாள் காதலனை வீட்டிற்கு வரச்சொல்லி தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து மறுநாள் வீட்டிற்கு வந்த அவரின் மனைவி கணவர் மர்மமாக இறந்தது கண்டு காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சு காதலன் ரவியுடன் சேர்ந்து இவ்வாறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |