Categories
தேசிய செய்திகள்

அதிகரித்த மதுபானங்களின் விலை…” சனிடைசர் குடித்து உயிரிழக்கும் மதுப் பிரியர்கள்”… அதிகரிக்கும் சம்பவம்..!!

மதுபானம் தற்போது விலை ஏறிய காரணத்தினால் மது பிரியர்கள் சானிடைசர் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது.

பொது ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டதால் போதைக்கு அடிமையான மது பிரியர்கள் குடிக்கத் தொடங்கினார்கள். இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்படும். சரக்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால் பலரும் சனிடைசர் குடிக்க தொடங்கியுள்ளனர். இதேபோல் ஆந்திராவில் சனிடைசர் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் விஜயவாடாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மதுபானம் விலை ஏற்றத்தால் மது பிரியர்கள் தற்போது குடித்து வருவது அதிகரித்து கொண்டே வருகின்றது. அதனை எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதிகளவில் எடுத்துக் கொள்பவர்கள் உயிரிழக்கின்றனர். இதை தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மதுபோதைக்கு அடிமையானவர்களிடம் சனிடைசர் விற்க்காதீர்கள் என்று காவல்துறையினரும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |