Categories
உலக செய்திகள்

மொபைல வாங்கி இப்படி பண்ணுவாங்களா….? இளம்பெண்ணுக்கு வந்த மிரட்டல்கள்…. தைரியமாக எடுத்த நடவடிக்கை….!!

வங்கிக்கு வந்த பெண்ணின் செல்போனிலிருந்து அவரது புகைப்படங்களை   ஊழியர் எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஹாரிஸ் கவுண்டியை சேர்ந்த ஜுயன் எஸ்டீபன்(27) என்பவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவர் வங்கிக்கு வரும் ஊழியர்களிடம் செல்போனை வாங்கி அதிலுள்ள அவர்களின் நிர்வாண படங்களை எடுத்து வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வங்கிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சென்றுள்ளார்.

அதேபோல் அந்த பெண்ணிடமும் வங்கிக் கணக்கு தொடர்பான தகவலை பெற வேண்டும் என்று செல்போனை வாங்கி அந்த பெண்களின் நிர்வாண படங்களை அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்துள்ளார்.பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வேறு சில ஆபாச புகைப்படங்ள் அனுப்பி வைத்ததோடு அவரின் பெற்றோரிடம் காட்டுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனை கண்ட அந்த பெண் பயப்படாமல் தைரியமாக காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் வங்கி ஊழியர் என்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவருக்கு 1500 டாலர் அபராதம்  வழங்கப்பட்டது. மேலும் மீண்டும் விசாரணை ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |