Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கையில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கூலி வேலை பார்ப்பதற்காக வாழை இழை அறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக சென்ற மின்சார கம்பி உரசியதில் ஆறுமுகம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவருடைய குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாரிய அதிகாரிகள் இதுபோன்று சம்பவம் அடிக்கடி நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |