சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் கொரானா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் கொரோனா தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மணி தலைமை தாங்கியுள்ளார்.
அவர் தலைமையில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவதன் அவசியம் குறித்து மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து அங்கு முககவசம் அணியாதவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ், பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, ஜெயகாந்தன், ராமன், கண்ணன், சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.