இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த, 2-வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புனேவில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே ,2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ,பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் ராகுல் 108 ரன்கள் ,ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு ரன்களை குவித்தனர். இதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி ,337 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆட்டத்தை தொடங்கியது.
ஆனால் இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 337 ரன்கள் எடுத்து ,மிக எளிமையாக இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி வெற்றியடைவதற்கு ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடியின் அதிரடி ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோ 124 ரன்களும் , ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர் . முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17 சிக்ஸர்களை அடித்தது. ஆனால் இங்கிலாந்து அணி 20 சிக்சர்களை அடித்து, தொடரை கைப்பற்றியது. இதில் ஜானி பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து 17 சிக்சர்களை அடித்து விளாசினர் . எனவே இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டித் தொடரில் 1-1 என்ற சம நிலை பெற்றுள்ளது .