குக் வித் கோமாளி கோமாளி சிவாங்கியும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் எழிலும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கியும், பாக்யலட்சுமி சீரியல் நடித்து வரும் எழிலும் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.