Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோடி எங்க டாடி” என்கிறார் அ.தி.மு.க. அமைச்சர்… வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்… சிங்கம்புணரியில் பரபரப்பு பிரசாரம்..!!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கம்புணரியில் 10 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரம் திறக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவாக தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பா.ஜ.க. உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்தவரை மோடியா லேடியா எனக் கேட்டார். அவர் மறைந்த பிறகு மோடி எங்க டாடி அவர் பேச்சைக் கேட்போம் என அ.தி.மு.க. அமைச்சர் பேசி வருகிறார். அ.தி.மு.க.விற்கு வாக்களித்தாலும் அது பா.ஜ க.விற்கு போடப்படும் ஓட்டு எனவும், பா.ஜ.க.வின் கிளைக்கழகம் அ.தி.மு.க. என்றும் கூறினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கம்புணரியில் பத்து வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரம் திறக்கவும், திருப்பத்தூரில் பாதாளசாக்கடை அமைக்கும் திட்டம் ஆகியவை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்படும். எனவே திமுக வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவு தெரிவித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் அவருடன் இருந்தார். இதில் சிங்கம்புணரி நகர செயலாளர் யாகூப், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், கூட்டணி கட்சியினர், பொதுக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அம்பள முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரணிப்பட்டி, பூலாங்குறிச்சி, திருக்கோளங்ங்குடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். பெரிய பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது ஒன்றிய பொறுப்பாளர் நாதன், செயலாளர் விராமதி மாணிக்கம், கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய துணை செயலாளர் நெடுமரம் எம்.ஆர்.சி. இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மானாமதுரை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து திருப்புவனத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, வசந்தி செங்கை மாறன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |