அமெரிக்காவில் படுக்கை அறைக்கு கீழே பதுங்கு குழியை கண்டு பெண் ஓருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்காவில் ஜெனிபர் லிட்டில் என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துள்ளது. அதனால் கடந்த 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை வாங்கி அதில் தற்போது வசித்துவருகிறார் .அந்த வீட்டில் அவரது படுக்கை அறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதை பார்த்துள்ளார் .ஆனால் அதனை முதலில் கண்டுகொள்ளத அவர் . சிறிது நாட்களுக்கு பிறகு அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளமிகுந்த ஆர்வத்துடன் இருந்துள்ளார்.அதனால் தனது நண்பர் ஒருவரை வரவழைத்து அவரின் உதவியோடு அந்த மூடிய திறந்து பார்த்துள்ளார்.
அதன் பிறகு தான்அவருக்கு தெரிந்தது அது சாக்கடை இல்லை அது ஒரு பதுங்கு குழி என்று அதன்பிறகு அந்த பதுங்குகுழியில் என்ன இருக்கும் என்பதை பார்க்கும் மிகுந்த ஆவலுடன் அவரது நண்பரும்அந்த பெண்ணும் அந்த பதுங்குகுழியில் இறங்கி பார்த்துள்ளனர். அதில் இருவர் தங்குவதற்கு வசதியாக படுக்கை அறை ஒன்றும் சிறுநீர் கழிக்க வசதியாக சிறிது இடமும் ,உடல் எடையை குறைக்க அந்த காலத்தில் பயன்படுத்திய சில கருவிகளும் அதில் இருந்துள்ளன.அந்தப் பதுங்கு குழி பழங்காலத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள மக்கள் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வீடுகளில் இதுபோன்ற பதுங்குகுழிகள் தோண்டப்பட்டும் என்பது பற்றி அந்த பெண் அறிந்து கொண்டார். தற்போது அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் அவர் பதிவிட்டார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.