கனடாவை சேர்ந்த தம்பதியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பிரம்மாண்ட பரிசுத்தொகை விழுந்துள்ளது.
கனடாவை சேர்ந்த தம்பதிகள் கிரிஸ்டோ பிரேயர் – சட் பிரேயர். இவர்களுக்கு நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் ஒரு நாள் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய இவர்கள் எப்போதும் போல அதனை அலட்சியமாக காரிலே வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த டிக்கெட்டிற்கு மிகப்பெரிய பரிசு தொகையாக ரூ. 50,000,000 விழுந்துள்ளது. இதனையடுத்து எதார்த்தமாக அந்த காரில் இருக்கும் டிக்கெட்டை பார்த்த கிரிஸ்டோ பிரேயர் அதனை எடுத்து பரிசு விழுந்துள்ளதா என்பதை செக் பண்ணி பார்த்துள்ளார்.
அப்போது அந்த அவர்கள் வாங்கிய டிக்கெட்டிற்கு மிக பெரிய பரிசுத்தொகை விழுந்ததை கண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறியதாவது “பரிசு தொகையை வைத்து கலிபோனியாக்கு செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போவதாகவும், புதியதாக வீடு மற்றும் கார் வாங்க இருப்பதாகவும், மேலும் இந்த பரிசுத் தொகையில் பாதி அளவு பணத்தை மருத்துவமனை மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.