இத்தாலியில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அமெரிக்கா, ஆசியா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் கொரோனா நோயால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் இத்தாலியில் அவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
அந்த வகையில் இத்தாலியில் இதுவரை 3.5 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2020ஆம் ஆண்டு 59,257,566 மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் 746,146 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது பிறப்பு விகிதத்தை விட அதிகமாக இருப்பதாகவும், மேலும் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் 74,000 ஆக இருந்த இறப்பு விகிதம் தற்போது 1,00,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், இது இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.