Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய …சக்தி வாய்ந்த புயலுக்கு … 5 பேர் பலியான சோகம் …!!!

அமெரிக்காவில் அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் கொரோனா தொற்று பாதிப்பால், மக்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாறுபாட்டால் அடிக்கடி புயல் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது . இந்தப் புயலானது பல மைல் வேகத்திற்கு சுழன்று அடித்தபடி சூறாவளி காற்றை  ஏற்படுத்தியது. இதனால் 100 க்கும் மேற்பட்ட மரங்கள், வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் சரிந்து கீழே விழுந்ததால் ,மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியது. சாலையில் சரிந்து விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .அதேசமயம் இந்த புயலில் நூற்றுக்கணக்கான  வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது .  இந்த சக்தி  வாய்ந்த புயலால்   5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாகாண கவர்னர்  கே  இவே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தும் படி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மேலும் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, எச்சரிக்கை செய்துள்ளது.

Categories

Tech |