திருவள்ளூர் , சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் செம்மரங்களை வெட்டி சேமித்து வைத்துள்ளனர் .அவ்வப்போது அதனை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்ததாக கூறப்படுகிறது .இம்மரங்கள் ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெட்டியுள்ளனர் .
இத்தகவல் பற்றிய ரகசிய துப்பு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்துள்ள நிலையில் போலீசார் அந்த குடோனை சோதனை செய்தனர் .இதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் கைப்பற்றினர் .மேலும் கார் மற்றும் மினி வேன் உள்ளிட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.