குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதேபோல பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.