ரோஜா சீரியல் நடிகர் சிப்பு தனது பிறந்தநாளை மாலத்தீவில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அனைத்து சீரியல்களையும் தாண்டி தற்போது ரோஜா தான் சீரியல் டி.ஆர்.பியின் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா-சிப்பு இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் சிப்பு நேற்று தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியுள்ளார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடியதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.