பரப்புரையில் ஈடுபடும் போது அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு தொகுதியாக சென்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதில் சிலர் பரப்புரையில் ஈடுபடும் போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுகின்றனர்.
சமீபத்தில் ஆ.ராசா முதல்வர் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்தக் கூடாது என்று திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தகைய பேச்சுகளை கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். ராசா, லியோனி போன்றவர்களின் பேச்சுகளால் விமர்சனம் எழுந்த நிலையில் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.