Categories
தேசிய செய்திகள்

செப்டம்பரில் 2-வது தடுப்பூசி அறிமுகம்… சீரம் இந்தியா அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை வருகின்ற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை வருகின்ற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் புனே வாலா தெரிவித்துள்ளார். கோவோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசியை அமெரிக்க தடுப்பூசி நிறுவனத்துடன் இணைந்து சீரம் தயாரிக்கிறது. இதன் சோதனைத் தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த தடுப்பூசிக்கு 89% செயல் திறன் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |