விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சிரமங்களை வெல்லும் திறன் அதிகரித்து காணப்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
ஆதாய பணவரவு கிட்டும். நண்பர்களுக்கு இயன்ற அளவில் உங்களால் முடிந்த உதவியை செய்து கொடுப்பீர்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று மனைவி வழியில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். ஆனால் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் கண்டிப்பாக இருக்கும். இன்று உங்களுடைய பிள்ளைகளுடைய கல்விக்காக சிறிது செலவு செய்ய நேரிடும். இன்று நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். யாருக்கும் எவ்விதமான ஜாமீன் கையொப்பமும் போடவே வேண்டாம். பெண்கள் இன்று நிதானமான போக்கையே அணுக வேண்டும். உத்தியோகத்தில் வேலை செய்யும் பெண்கள் எதிலும் அவசரம் காட்டக்கூடாது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் சிறிது கசப்பு ஏற்படுத்தும். இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.