Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

கருத்து கணிப்பு அல்ல…. கருத்து திணிப்பு – கமல் காட்டம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஒரு கருத்து திணிப்பு கோவை தெற்கு தொகுதி மக்கள் எனக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர் என்று கமல் தெரிவித்துள்ளார். இருப்பதை விட்டு இல்லாத இடத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்துகிறது. மக்கள் நீதி மையம் உறுப்பினர் தொகுதி நிதியை எவ்வாறு செலவு செய்கிறார்கள்? என்பதை ஆர்டிஐ மூலம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |