உணவுக்கு மீன் வாங்க சென்ற ஏழை நபருக்கு உயர்தர முத்து கிடைத்து கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
தாய்லாந்து சாதுன் மாகாணத்தை சேர்ந்த kadchakorn Tantiwiwatkul என்பவர் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு உணவுக்காக மீன் சந்தையில் இருந்து கடல் நத்தைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அவற்றை சமைப்பதற்காக சுத்தம் செய்துள்ளார். அப்போது ஒரு நத்தையை பிளக்கும்போது அதில் ஆரஞ்சு நிறத்தில் உருண்டையாக இருப்பதை கண்டார். kadchakorn Tantiwiwatkul அதை கல் என நினைத்து தூக்கி எறிந்துவிட்டு சமைக்க தொடங்கினார்.
ஆனால் அதன் பளபளப்பு அவரை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. உடனே அதை எடுத்து பார்த்த போது அது 6 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மெலோ முத்து என்பது தெரிய வந்தது. kadchakorn Tantiwiwatkul அதை நல்ல விலைக்கு விற்க போவதாக கூறியுள்ளார். அந்தப் பணத்தை தன்னுடைய தந்தை விபத்தில் சிக்கிய சிகிச்சைக்கும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளதால் அவரின் சிகிச்சைக்கும் பயன்படுத்த போவதாக கூறியுள்ளார். மெலோ முத்துக்களுக்கு பல கோடிகள் மதிப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.