Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் முழு மனதுடன் பணிபுரிவதால் நன்மை கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம் சுமாரான அளவில் தான் நடக்கும். இன்று உங்களுக்கு அளவான பணவரவு தான் கிடைக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ வழிபாடு செய்வது மனதுக்கு ஆறுதல் கொடுக்கும். இன்று நீங்கள் யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது சிறந்தது. தேவையில்லாத விஷயத்தில் கவனம் வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. எதிலும் நிதானம் தேவை. புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள் சில இடர்ப்பாடுகளை சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் பெரிய முதலீடுகளை குறைத்துக் கொள்வது சிறந்தது. இன்று நீங்கள் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வரவு செலவில் இருந்து வந்த சந்தேகங்கள் இன்று தீரும். தொழிலுக்காக நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சந்தேகம் உணர்வை நீங்கள் தயவுசெய்து குறைந்துக் கொள்வது சிறந்தது.
இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவது சிறந்தது. உங்கள் குடும்பத்தார் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு நடப்பது சிறந்தது. தேவையில்லாத முன் கோபத்தை குறைத்து விட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நாள் உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முதுகு வலி தலைவலி வர வாய்ப்பு உள்ளது. யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு கலகலப்பான செய்திகள் வர வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலைக்கான உத்தரவு கடிதம் வர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். தெரியாத மனிதர்களிடம் பேச்சில் உரையாடும் பொழுது கவனம் தேவை. காதலில் உள்ளவர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. காதலின் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு ஞாபகத்திறன் சிறிது குறைவாகவே தான் இருக்கும். இன்று உங்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடங்களை கற்பது சிறந்தது. படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |