Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளையே… 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… கொடூரத்தின் உச்சம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெற்ற தந்தையே மகளை 5 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் முன்னேற்றம் குறித்து எவ்வளவுதான் பேசினாலும் பெண்கள் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வெளியில் அனுப்பவே அச்சம் கொள்கின்றனர். அந்த அளவிற்கு தற்போது இந்தியாவில் நிலைமை உள்ளது. இதற்கு கடுமையான தண்டனைகள், சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் இது போன்ற பிரச்சனைகள் குறைந்தபாடில்லை.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானா தெஹ்ஸில் கலந்த் கிராமத்தில் 5 வயது மகளை அவரது தந்தை ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அங்கு சென்று அந்த குழந்தையை அவர்கள் மீட்டனர். பின்னர் அந்த குழந்தையின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |