பிரேசில் நாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 57 பேர் உயிரிழந்தனர்
பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் சர்வ சாதாரணமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அந்நாட்டில் பாரா மாநிலத்தின் அல்டமிரா என்ற நகரில் உள்ள ஒரு சிறையில் நேற்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டது. வன்முறையின் போது தீ வைக்கப்பட்டதில் தீயில் சிக்கி பெரும்பாலான கைதிகள் பலியாகினர்.
இந்த பயங்கர மோதலின் போது பணையக் கைதிகளாக இரண்டு பாதுகாவலர்கள் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இதே போல கடந்த மே மாதம் அமேசான் நகரின் சிறையில் நடைபெற்ற கலவரத்திலும் 60 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.