நடிகர் தனுஷ் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதைத் தொடர்ந்து தனுஷ் டி 43, தி கிரே மேன், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d44 என பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . தற்போது இவர் இந்தியில் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அத்ரங்கி ரே.
It’s the last day of #AtrangiRe and I can’t wait for you’ll to experience the magic created by @aanandlrai. Also a big thank you to my co-stars #SaraAliKhan and @dhanushkraja for letting me be a part of this beautiful film 🙏🏻
An @arrahman musical.
Written by: #HimanshuSharma pic.twitter.com/VWbcsYOw11— Akshay Kumar (@akshaykumar) March 27, 2021
இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.