ராம்பூர் அருகே ஒரு கணவன் மனைவியின் பிறப்புறுப்பை நூலால் தைத்து கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். அந்த கணவர் மனைவி மீது எப்போதும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை வலுக்கட்டாயமாக கை, கால்களை கட்டி வைத்து விட்டு அலுமினிய நூலால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை வலியில் துடிக்க துடிக்க தைத்துள்ளார்.இதனால் ரத்தப்போக்கு அதிகளவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து அந்தப் பெண் முயன்றவரை அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அவரின் மகளை அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ராம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.