ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி காலத்தில் பென்ஷன் பணம் வழங்கப்படும். இந்த பென்சன் பணத்தை அவர்கள் பிபிஓ என்ற எண் மூலமாக பெறுவார்கள். இது 12 இலக்க எண்ணாகும். மத்திய பென்சன் கணக்கு அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள இந்த எண் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணானது பென்ஷன் வாங்குபவர்களின் வங்கி புத்தகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் பென்சனர்கள் தங்களுடைய ஒரு வங்கி கிளையிலிருந்து இருந்து வேறு வங்கிக் கிளைக்கு மாற்ற வேண்டும் என்றாலும் இந்த PPO எண் தேவை. இந்நிலையில் PPO தொடர்பான எல்லா தகவல்களையும் இபிஎப்ஓ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். எனவே இனி பிஎஃப் அலுவலகத்திற்கு ஓய்வூதியர்கள் அலையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.