மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது தாஹிர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொண்டு உள்ளார். இது குறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அவர்கள் தீயில் எரிந்து கருகினர். முதற்கட்ட விசாரணையில் தாஹிர்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தனது மனைவி மற்றும் குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது. தப்பித்து ஓட முயன்ற தாஹிரை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.