மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் ஓப்ரா வின்ஃப்ரே-யின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பாதுகாவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனின் தந்தை தான் தாமஸ் மெர்க்கல். இவர் நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஓப்ரா வின்ஃப்ரே-யின் பங்களாவிற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பாதுகாவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், தனது கதையை ஓப்ராவிடம் சொல்ல விரும்புகிறேன் என்று எழுதியதாக தெரியவந்துள்ளது. இது எதற்காக என்றால், பிரிட்டன் இளவரசர் ஹரியும்- மேகனும் ஓப்ரா வின்ப்ரேக்கு அளித்த பேட்டி சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தப் பேட்டியில் மேகன், ” என் தந்தை எனக்கு துரோகம் செய்து விட்டார் ” என்று கூறினார். இதனால் அவரது தந்தை தாமஸ் தன் பக்கம் உள்ள கருத்துக்களை தெரிவிப்பதற்காக தான் கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலேயே வாழும் தாமஸை அவரது மகள் மேகன், மேகனின் கணவர் ஹரி, மற்றும் இவர்களின் மகன் ஆர்ச்சி ஆகிய மூவரும் மூன்று ஆண்டுகளில் ஒரு முறை வந்து கூட பார்க்கவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.