Categories
தேசிய செய்திகள்

மக்களே! சிலிண்டர் விலை ரூ.700 தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு….!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. மேலும் தற்போது சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ரூ.819 மதிப்புள்ள எல்பிஜி சிலிண்டர் வெறும் ரூ.119க்கு வாங்கலாம் என்று பேடிஎம் அதிரடி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. பேடிஎம் செயலி மூலம் முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்கள் முன்பதிவு செய்து செயலியின் மூலம் பணம் செலுத்தும் போது இந்த சலுகையின் கீழ் ரூபாய் 700 கிடைக்கும். நீங்கள் பணம் செலுத்தும் போது உங்களுக்கு ஒரு ஸ்க்ரேட் கார்டு கிடைக்கும். அதை கீறி நீங்கள் உங்களுக்கான சலுகையை பார்க்க முடியும்.

Categories

Tech |