Categories
தேசிய செய்திகள்

குழந்தை வரம் வேணும்னு…”3 வயது குழந்தையை பிளாஸ்டிக் பையில் கட்டி”… பலியாகிய பெண்..!!

குழந்தை வரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 3 வயது குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி அருகே ரோகிணி என்ற பகுதியில் வசித்து வருபவர் நீலம் குப்தா. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. பல சிகிச்சைகள் செய்தும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு உத்திரப்பிரதேசத்தின் கர்தோன் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மந்திரவாதி ஒருவர் நீங்கள் கருத்தரிக்க வேண்டுமானால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

அப்போது அருகில் உள்ள வீட்டில் தேடிப் பார்த்தபோது நீலம் குப்தாவின் வீட்டில் ஒரு பிளாஸ்டிக் மூட்டை கிடந்தது. அந்த மூட்டையில் அந்த சிறுவன் கழுத்தில் காயத்துடன் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார் அந்த பெண்ணிடம்  விசாரணை நடத்தினர். அப்போது தான் சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் குத்தி கொலை செய்து  பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |