தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இதற்கு மத்தியில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் எஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா கவருடன் திருச்சி லோகநாதன், தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டோன்மென்ட் , உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பணப்பட்டுவாடா கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.