Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்…. நிரம்பி வழியும் கூட்டம்…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா என வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் சென்னையில் இருந்து வட மாநிலத்தவர்கள் அச்சத்தில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னையிலிருந்து கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிறைந்தே இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |