Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

கோவிலில் சசிகலா யாகம்…. மனம் உருகி வழிபாடு…. காரணம் என்ன…???

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். இதையடுத்து சிறிது காலம் பெங்களூரில் தங்கி ஓய்வெடுத்து விட்டு பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அவர் சென்னைக்கு திரும்பும்போது பல்வேறு பரபரப்புகள் எழுந்தன. இதனால் சசிகலாவின் வருகையினால் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும், பபரபரப்புக்கு  இருக்காது என்றும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால் அதற்கு மாற்றாக சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக  அறிவித்தார். இந்நிலையில் சசிகலா நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டம் நாகநாதர் திருக்கோவிலில் ராகு பகவானுக்கு சிறப்பு யாகம் செய்தார். பின் மனமுருகி வழிபாடு செய்த சசிகலா கோயிலில் கூடியிருந்த பக்தர்கள், பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் யாகத்தில் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |