தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடும் டிடிவி தினகரன் பிரச்சாரத்தின்போது, ஆளுங்கட்சி மக்களையும் தொண்டர்களையும் நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். தொகுதிக்கு தலா ரூபாய் 50 கோடி, 100 கோடி இறக்கி வைத்து பணம் கொடுத்து வாக்கை பெறலாம் என்று எண்ணுகின்றனர். துரோக ஆட்சியாளர்கள், தமிழன துரோகிகளை ஒழிக்க வேண்டும். தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அதிலும் பித்தலாட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என்று விமர்சனம் செய்துள்ளார்.