Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு…. ரூ.5,000 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த சூழலில் கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருவதால் 9 முதல் 11 வரையிலான மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என மொத்தம் 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தலா 5,000 அபராதம் விதித்து மாவட்டஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |