தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் மநீம தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். இந்நிலையில் அதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து ஸ்மிருதி ராணி பிரச்சாரம் செய்துள்ளார்.அப்போது, கோவை தெற்கு தொகுதி பிரச்சனைகள் குறித்து வானதி சீனிவாசனுடன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? என்று சவால் விட்டுள்ளார். மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வது, தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன் என்று கூறியுள்ளார்.