தமிழகத்தில் வங்கிகள் தொடர் விடுமுறை என்ற அறிவிப்பு உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் வங்கிகள் ஏழு நாட்கள் தொடர்ந்து செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வங்கி சேவைகளை உடனே விரைந்து முடித்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வங்கி தொடர் விடுமுறை என தகவல் வெளியாகி இருந்தது.
இந்தச் செய்தி உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மார்ச் 29 ஹோலி பண்டிகை என்பதால் வட மாநிலங்களுக்கும் மட்டுமே விடுமுறை. தமிழகத்தில் அந்த விடுமுறை கிடையாது. மார்ச் 30 பாட்னாவில் மட்டும் வங்கி சேவை இயங்காது. மார்ச் 31, ஏப்ரல் 1, 2,3,4 ஆகிய நாட்கள் விடுமுறை தான் என விளக்கம் அளித்துள்ளனர்.