Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் டீ ,காப்பி, பாலில் இதை சேர்த்து குடிங்க”…. உடலில் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!!

காலையில் எழுந்தவுடன் டீ, காபியில் கசகசாவை சேர்த்து நாம் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த தொகுப்பி பார்ப்போம்.

கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

கசகசாவை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் ஒளியும். கசகசா விதையில் கரு வளர்ச்சியை மேம்படுத்தும் மருந்து உள்ளது.

கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நம் உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட் தேவைப்படும். அதற்கு கசகசா விதைகள் நல்ல பயன் அளிக்கின்றது.

வாய்ப்புண்களை குணப்படுத்த இது பயன்படுகிறது. மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம், இரும்பு சத்து, தாமிரம் ஆகியவை மூளைக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.

எலும்புகளை பலப்படுத்த இது உதவுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசகசா விதைகள் உதவுகிறது. இதில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கசகசாவில் உள்ள துத்தநாகம் இதயத்திற்கு நல்ல கொழுப்பு சத்துக்களை கொடுக்கிறது

Categories

Tech |