ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று காலை லாரி மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று திரும்பியபோது தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.