ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் ஸ்பெயினிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் பயணத்தின் போது கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் விமானம் மூலம் பயணம் செய்தவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தரைவழி பயணம் செய்பவர்களுக்கும் இந்த சட்டத்தை வரும் மார்ச் 30ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
அதன்படி ஸ்பெயினிற்க்கு செல்பவர்கள் தங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும், மேலும் அந்த பரிசோதனையின் முடிவில் வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே ஸ்பெயின் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்கு பகுதி நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.