Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ஏப்ரல் 1-ம் தேதி கடைசி நாள்…!!!

நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலய பள்ளிகளில் சேர்க்கை பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. அதன்படி, தமிழகத்தில் 48 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கான மாணவா் சோக்கையை கேந்திரிய வித்யாலயா இயக்குநரகம் (கேவி சங்கதன்) இணைய வழியில் நடத்தி வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான 1-ம் வகுப்பு மாணவா் சோக்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. விருப்பம் உள்ளவா்கள் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 7 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதைத் தொடா்ந்து இதர வகுப்புக்கான சேர்க்கைக்கு ஏப்ரல் 8 முதல் 15-ம் தேதி வரை நேரடியாகச் சென்று பதிவு செய்துகொள்ளலாம். இதுதவிர 2021-22-ம் ஆண்டுக்கான சேர்க்கை அட்டவணையின்படி பிளஸ் 1 சேர்வதற்கான படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |