கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
திருவண்ணாமலை அருகே கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற சிறிய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்த்து அதை இரண்டு பேர் பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் எழுந்தது .
இதையடுத்து அங்கு மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கீக்களூர் வந்தனர் . ஆனால் அவர்களின் விசாரணை முறையாக நடத்தவில்லை என கூறி ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் மறைத்து வைக்கப்பட்ட சாராயபாக்கெட்டுகளை எடுத்து வந்து முன் கொட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து அதிகாரிகள் இதில் சம்மந்த பட்ட நபர்கள் விரைவில் கைது செய்யபடுவார்கள் என்று உறுதியளித்த பின் அப்பகுதி பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர் .