Categories
உலக செய்திகள்

நூலகத்தில் நடந்த வன்முறை.. இரத்தத்துடன் கிடந்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

கனடாவில் உள்ள ஒரு நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

கனடாவில் உள்ள North Vancouver என்ற பகுதியில் உள்ள Lynn Valley என்ற நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர், நூலகத்தின் உள்ளும் வெளியிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது  தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்திருக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆறு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அதில் காவல்துறையினர் ஒரு நபரை பிடிக்கும் காட்சி உள்ளது.

https://twitter.com/Craig_Mc_B/status/1375924717861793792

ஈதன் ஜான்சன் என்ற நபர் நூலகத்திற்கு அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, பெண் ஒருவர் அலறுவதைக் கேட்டு ஜன்னலை திறந்து பார்க்கையில், துணை மருத்துவர்கள் தரையில் இரத்தத்துடன் கிடந்த ஒரு நபருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்ததை கண்டதாக கூறியுள்ளார்.

1.46 மணியளவில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டவுடன் 11 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு நபர் உயிரிழந்ததாக மட்டும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |