Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிப்போட்டிக்கு தேர்வானது 5 போட்டியாளர்களா?… குக் வித் கோமாளியில் புது திருப்பம்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு 5-வது பைனலிஸ்டாக பவித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வாரம் நடந்த வைல்ட் கார்டு போட்டியில் சகிலா நான்காவது பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் புது திருப்பமாக இறுதிப்போட்டிக்கு 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்த நிகழ்ச்சியின் நடுவர் செப் தாமு அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரித்திகா மற்றும் பவித்ரா இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது. இவர்களில் பவித்ரா சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு 5-வது பைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இறுதிப் போட்டிக்கு தேர்வான இந்த ஐந்து போட்டியாளர்களில் டைட்டிலை வெல்பவர் யார்? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |